நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சின்னமனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சின்னமனூரில் வெள்ளிக்கிழமை மிட்டாய் மொத்த வியாபாரக் கடையில் ஆய்வு நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சிரஞ்சீவி.

News image

சின்னமனூரில் வெள்ளிக்கிழமை மிட்டாய் மொத்த வியாபாரக் கடையில் ஆய்வு நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சிரஞ்சீவி.

Updated On :20 ஜூன் 2026, 2:11 am IST

தேனி மாவட்டம், சின்னமனூரில் வெள்ளிக்கிழமை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் காலாவதியான உணவுப் பொருள்கள், பழங்களைப் பறிமுதல் செய்தனா்.

சின்னமனூா் நகரில் உணவகங்கள், தேநீா் கடைகள், துரித உணவகங்கள், சிற்றுண்டி இனிப்பு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்கள், மிட்டாய் தயாரிப்பு தொழில்சாலைகளில் சட்ட விரோதமான முறையில் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக செயற்கை நிறமிகள் சோ்க்கப்படுவதாகவும், காலாவதியான ரொட்டி, சிக்கன் உள்ளிட்ட உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகாா் எழுந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் உத்தரவின்படி, சின்னமனூா் நகராட்சியிலுள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சசிதீபா தலைமையில், அந்தத் துறை அலுவலா் சிரஞ்சீவி முன்னிலையில் ஆய்வு நடைபெற்றது.

அப்போது, காலாவதியான 3.5 கிலோ உணவுப்பொருள்கள், 4.2 கிலோ பழங்கள், தடை செய்யப்பட்ட 28 கிலோ நெகிழிப்பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். சுகாதாரமின்றி தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் பயன்படுத்திய கடை உரிமையாளா்கள் 3 பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.