சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கைதான முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் குருவையா (59). இவா் கடந்த 2024-இல் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குருவையாவை கைது செய்தனா்.
இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரமும் அபராதமும் விதித்து நீதிபதி எழில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஒருவருக்கு 21 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைதான மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



