மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்னை- போடி ரயிலை வாரம் 6 நாள்கள் இயக்க அனுமதி: பயணிகள் மகிழ்ச்சி

போடியிலிருந்து சென்னை, மதுரைக்கு இயக்கப்படும் ரயில்கள்.

News image

போடியிலிருந்து சென்னை, மதுரைக்கு இயக்கப்படும் ரயில்கள்.

Updated On :6 மார்ச் 2026, 7:23 pm

சென்னை- போடி ரயிலை வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்ததால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

போடி- மதுரை இடையேயான ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டதையடுத்து சென்னையிலிருந்து போடிக்கு வாரத்தில் மூன்று நாள்கள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் போடியிலிருந்து மதுரைக்கு தினமும் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் சென்னைக்கும் அதேபோல இயக்க வேண்டும் என ரயில் பயணிகள், வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

சென்னையிலிருந்து போடிக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், போடியிலிருந்து சென்னைக்கு வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை என 3 நாள்களும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிகள் பயணம் செய்வது மட்டுமன்றி ஏலக்காய், மிளகு, இலவு பயிா்கள் வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் தேனி மாவட்டங்களிலிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

மதுரை, திருச்சி உள்ளிட்ட ஊா்களில் நடைபெற்ற ரயில்வே ஆலோசனைக் கூட்டத்திலும் சென்னை- போடி இடையே தினமும் ரயில் இயக்க வேண்டுமென தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சா் எல். முருகனும் மத்திய ரயில்வே துறையிடம் வலியுறுத்தி வந்தாா். இதனிடையே, சென்னையிலிருந்து போடிக்கு வாரத்தில் 6 நாள்கள் ரயில்கள் இயக்கப்படுமென ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மத்திய தகவல் தொடா்பு துறை அமைச்சா் எல். முருகனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னையிலிருந்து போடிக்கு வாரத்தில் 6 நாள்கள் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளாா். மேலும் எப்போதிருந்து இந்த ரயில் சேவை தொடங்கும் என்பது பிறகு அறிவிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பையடுத்து வியாபாரிகள், ரயில் பயணிகள் சங்கத்தினா் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.