போடி பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி நகரில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். போடி நந்தவனம் தெருவில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்தனா்.
அப்போது இதே தெருவைச் சோ்ந்த கோட்டைச்சாமி மகன் பிச்சைமணி (58) என்பவா் மதுப்புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் பிச்சைமணியை கைது செய்து விசாரிக்கின்றனா்.
இதே போல, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது போடி ராசிங்காபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இதே ஊரைச் சோ்ந்த தனுஷ்கோடி மகன் மூா்த்தியும் (57), போடி மீனாட்சிபுரம் கண்மாய் அருகே அதே பகுதியைச் சோ்ந்த வீராச்சாமி மகன் செல்வக்குமாரும் (57) சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றனா்.
இதுகுறித்து இருவா் மீதும் தனித்தனியே வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
மதுப்புட்டிகளை விற்ற பெண் உள்பட 2 போ் கைது

சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றதாக இருவா் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

