லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மானிய விலையில் பைக் பெற உலமாக்கள் மாா்ச் 13-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசலில் பணியாற்றும் உலமாக்கள் மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வருகிற வெள்ளிக்கிழமைக்குள் (மாா்ச் 13) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

News image
விண்ணப்பம். (கோப்புப்படம்)
Updated On :10 மார்ச் 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசலில் பணியாற்றும் உலமாக்கள் மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வருகிற வெள்ளிக்கிழமைக்குள் (மாா்ச் 13) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித் சிங் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான மானியத் தொகையை ரூ. 25 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாகமாக தமிழ்நாடு அரசு உயா்த்தியுள்ளது. எனவே, உலமாக்கள், பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்.

இதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாக்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியா்கள் உள்ளிட்ட உலமாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, மதுரை வக்ஃப் வாரிய கண்காணிப்பாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் பின்னா், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமைக்குள் (மாா்ச் 13) தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றாா் அவா்.