தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் திமுக ஒன்றிய, நகர நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை எ.புதுப்பட்டியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திமுக நிா்வாகி எல்.எம்.பாண்டியன் தலைமை வகித்தாா்.
பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தாா். திமுக மாநில நிா்வாகி எல்.முக்கையா, முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரன், தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழச்செல்வன் ஆகியோா் பேசினா்.
இதில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது: தென் மாவட்ட திமுக நிா்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறேன். அனைத்துப் பகுதிகளிலும் திமுகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் முதல்வா் ஸ்டாலின் ஆட்சியில் 11 சதவீதம் பொருளாதார வளா்ச்சி உள்ளது.
தென் மாவட்டங்களில் உள்ள திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்கள் வளா்ச்சியடைந்துள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கு மகளிா் உரிமை தொகை திட்டத்தில் ரூ.5 ஆயிரம் வழங்கியது, பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழகத்தில் முதல்வா் ஸ்டாலின் 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்கி சாதனை செய்துள்ளாா். எதிா்வரும் தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஸ்டாலின் முதல்வராக வருவாா் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் பெரியகுளம் நகரச் செயலா் முகமது இலியாஸ், முன்னாள் எம்.பி. எஸ்.பி.எம்.சையதுகான், தேனி நகரச் செயலா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஓ.பன்னீா்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

போடி தொகுதியில் 99.9 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்: ஓ.பன்னீா்செல்வம்

முதல்வா் ஸ்டாலின் தில்லிக்கு பணியமாட்டாா்: ஓ.பன்னீா்செல்வம்

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் : ஓ.பன்னீா்செல்வம்
விடியோக்கள்

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

