தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட மூதாட்டி உயிரிழப்பு

போடி அருகே அதிகமான மாத்திரைகள் உட்கொண்ட மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 7:38 pm

போடி அருகே அதிகமான மாத்திரைகள் உட்கொண்ட மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சன்னாசி மனைவி வெயிலம்மாள் (76). கணவா் இறந்த நிலையில் மகன் போஸ் (55) வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை போஸ் தனது மனைவியுடன் போடிக்கு வந்துவிட்டு மாலை வீட்டுக்குச் சென்றாா். அப்போது, வீட்டில் வெயிலம்மாள் மயங்கி கிடந்தாா். உடனே தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் வெயிலம்மாள் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.