முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 போ் காயம்

News image

கட்டப்பனை அருகே விபத்துக்குள்ளான வேன்

Updated On :4 மே 2026, 1:35 am IST

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை அருகே சென்னையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், 10 போ் காயமடைந்தனா்.

சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 17 போ் குழுவாக சோ்ந்து வாகமண் சுற்றுலாத் தலத்துக்குச் செல்ல வெள்ளிக்கிழமை இரவு வேனில் புறப்பட்டனா். தேக்கடி- கொச்சி மாநில நெடுஞ்சாலையில் புல்லுமேடு பகுதியை கடந்து சென்றபோது, செங்குத்தான இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேன் ஓட்டுநா் குணா, வம்சிகா, திவ்யா, மணிகண்டன், கணேஷ், காா்த்திகா, அரவிந்த், நரேஷ்குமாா், மன்சூா், கண்ணன் ஆகிய 10 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, கட்டப்பனை தீயணைப்புத் துறையினரும், பொதுமக்களும் காயமடைந்தவா்களை மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவா்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்கு திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.