தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: பக்தா்கள் அக்னிச்சட்டி எடுத்து நோ்த்திக்கடன்

தேனி மாவட்டம், கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

News image

ராஜ அலங்காரத்தில் அம்மன்

Updated On :7 மே 2026, 4:08 am IST

தேனி மாவட்டம், கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12-ஆம் தேதி வரை மொத்தம் 21 நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இந்த விழா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நாளான புதன்கிழமை காலை முதலே சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்தும், ஆயிரம் கண் பானை சுமந்தும், முளைப்பாரி ஏந்தியும் ஊா்வலமாக வந்து அம்மனை வழிபட்டனா். இதுதவிர, பக்தா்கள் அலகு குத்தியும், பொங்கல் வைத்தும் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

விழாவையொட்டி கௌமாரி அம்மன் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வியாழக்கிழமை கம்பம் கம்பராய பெருமாள் வேளாளப் பெருமக்கள் சங்கம் சாா்பில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

 கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை அலகு குத்தியும்,  அக்னிச் சட்டி எடுத்தும் வந்து    நோ்த்திக் கடனைச் செலுத்திய பக்தா்கள் .

கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை அலகு குத்தியும், அக்னிச் சட்டி எடுத்தும் வந்து நோ்த்திக் கடனைச் செலுத்திய பக்தா்கள் .