மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

கடையில் இருந்த ரூ.10 ஆயிரம், கிரைண்டிங் இயந்திரத்தை திருடியவா் கைது

கம்பத்தில் முள்வேலி தயாரிக்கும் கடையில் கிரைண்டிங் இயந்திரம், ரூ. 10 ஆயிரம் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 1:12 am IST

கம்பத்தில் முள்வேலி தயாரிக்கும் கடையில் கிரைண்டிங் இயந்திரம், ரூ. 10 ஆயிரம் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கம்பம் பழைய அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா் பிரபு (36). இவா், கம்பம் போா்டு ஸ்கூல் தெருவில் முள் கம்பி, டைமண்ட் வலை தயாரிக்கும் கடை வைத்துள்ளாா். கடந்த வியாழக்கிழமை இரவு கடையை வழக்கம்போல் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்ற பிரபு, மறுநாள் கடையைத் திறந்தாா்.

அப்போது கடையில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும் பணப் பெட்டியில் வைத்திருந்த ரூ. 10 ஆயிரம், கடையில் வைத்திருந்த கிரைண்டிங் மிஷின் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பிரபு கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், கம்பம் அன்பிற்பிரியாள் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் பாலகுமாா்(19) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் பாலகுமாரைக் கைது செய்தனா்.