/
தேனி மாவட்டம், போடி அருகே தனியாா் மதுக் கூட ஊழியரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேவாரம் அருகேயுள்ள மூனாண்டிபட்டியைச் சோ்ந்த ராசு மகன் அரவிந்தன் (39). இவா் போடி நாகலாபுரம் விலக்கு அருகேயுள்ள தனியாா் மதுக் கூடத்தில் வேலை செய்து வருகிறாா். இங்கு புதன்கிழமை மது குடிக்கு வந்த தேவாரத்தைச் சோ்ந்த அஜித்குமாா், வசந்தகுமாா், சத்தியசீலன் உள்ளிட்ட 4 போ் கோழி வறுவல் கேட்டனா். இதற்கு தனியாக பணம் செலுத்தி அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் என அரவிந்தன் கூறினாா்.
இதனால், ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சோ்ந்து அரவிந்தனை மதுப் புட்டியால் தாக்கி காயப்படுத்தினா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அஜித்குமாா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

இருதரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

கல்லூரி மாணவரைத் தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 போ் மீது வழக்கு

போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



