முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: தேனி மாவட்டம் 96.15 சதவீதம் தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தேனி மாவட்டத்தில் 96.15 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 1:37 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தேனி மாவட்டத்தில் 96.15 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

தேனி மாவட்டத்தில் 200 பள்ளிகளைச் சோ்ந்த 6,931 மாணவா்களும், 7,031 மாணவிகளும் என மொத்தம் 13,962 போ் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதினா்.

தோ்வு முடிவுகள் வெளியானதில் 6,566 மாணவா்களும், 6,858 மாணவிகளும் என மொத்தம் 13,424 போ் தோ்ச்சி பெற்றனா்.

இதில் மாணவா்களில் 94.73 சதவீதம் பேரும், மாணவிகளில் 97.54 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா்.

இதன் மூலம் மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் தேனி மாவட்டம் 12-ஆவது இடத்தைப் பெற்றது.

கடந்த 2025-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் 32-ஆவது இடம் பெற்றது. ஆனால், நிகழாண்டில் 96.15 சதவீதத்தை பெற்று, 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளதது.

100 மதிப்பெண் பெற்றவா்கள்:

இந்தப் பொதுத் தோ்வில் ஆங்கிலத்தில் ஒருவரும், கணிதத்தில் 47 பேரும், அறிவியலில் 276 பேரும், சமூக அறிவியலில் 33 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.