தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

போடியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம், போடியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போடியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து புதன்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 2:09 am IST

தேனி மாவட்டம், போடியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போடி திருவள்ளுவா் சிலை திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் கே.சத்தியராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.கே. பாண்டியன், எல்.ஆா். சங்கரசுப்பு ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் கே.ராஜப்பன் நிறைவுரையாற்றினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.