/
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து கடந்த திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை இல்லை. இதனால் கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்தது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை காலை முதல் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா். மேலும், கும்பக்கரை அருவிக்கு சீரான நீா்வரத்து ஏற்படும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளதாக தெரிவித்தனா்.
தொடர்புடையது

சுருளி அருவியில் நீா் வரத்தில்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

களக்காடு தலையணையில் நீா்வரத்து: குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு: 2-ஆவது நாளாகக் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



