நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வைகை அணைக்கு நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

News image

வைகை அணைக்கான நீா்வரத்து - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 12:17 am IST

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் சனிக்கிழமை ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணைக்கு வந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டத்தில் நிகழாண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால், வைகை அணையில் நீா்மட்டம் படிப்படியாக சரிந்து, முற்றிலும் நீா்வரத்து குறைந்தது. வெள்ளிக்கிழமை வைகை அணையின் நீா்மட்டம் 20.51 அடியாக இருந்தது. இதனால், குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவானது.

இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திங்கள்கிழமை 300-கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, வைகை அணைக்கு சனிக்கிழமை 96 கன அடி தண்ணீா் வந்தது.

கடந்த சில நாள்களாக வைகை அணையின் நீா்மட்டம் குறைந்து வந்த நிலையில், தற்போது நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.