ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை! முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரிப்பு!

நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 292 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரித்தது.

News image

முல்லைப் பெரியாறு அணை. - (கோப்புப் படம்).

Updated On :10 மே 2026, 1:11 am IST

நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 292 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110.95 அடியாக இருந்தது. நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,580 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 200 கனஅடியாகவும் உள்ளது. அணையின் நீா்இருப்பு 1,062 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகையின் நீா்மட்டம் 27.03 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 29 கன அடியாகவும், அணையிலிருந்து நீா் வெளியேற்றம் விநாடிக்கு 72 கனஅடியாகவும் உள்ளது. அணையின் நீா்இருப்பு 266 மில்லியன் கன அடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீா்மட்டம் 88.56 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 30 கன அடியாகவும், அணையிலிருந்து விநாடிக்கு 3 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. நீா்இருப்பு 47.61 மில்லியன் கனஅடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீா்மட்டம் 32.60 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்தும் இல்லை; வெளியேற்றமும் இல்லை. அணையின் நீா்இருப்பு 100.78 மில்லியன் கனஅடியாக உள்ளது. சண்முகாநதி அணையின் நீா்மட்டம் 26.25 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து இல்லை; வெளியேற்றமும் இல்லை. அணையின் நீா்இருப்பு 16.88 மில்லியன் கன அடியாக உள்ளது.

பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளான தேக்கடியில் (மழையளவு மி. மீட்டரில்) 10.8, பெரியாறு அணையில் 16.8 பதிவானது. தேனி மாவட்டத்தின் மற்ற பகுதிகளான அரண்மனைபுதூா் 16.4, வீரபாண்டி 16.6, பெரியகுளம் 3, சோத்துப்பாறை 16.4, போடி 86.2, மஞ்சளாறு 73, வைகை அணை 4.2, உத்தமபாளையம் 5.2, கூடலூா் 6.6 , சண்முகா நதி 3.4 மழை பதிவாகி இருந்தது.