தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:18 am IST

போடி அருகே சட்டவிரோதமாக மதுப்புட்டிகளைப் பதுக்கி விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேலச்சொக்கநாதபுரம் விலக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

அவரிடம் மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இவா் போடி ராமகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் சுரேஷ் (40) என்பதும், சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.