தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தேனியில் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பு மும்முரம்

தீபாவளி பண்டிகையையொட்டி தேனி, பெரியகுளம் பகுதிகளில் பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமடைந்தது.

பெரியகுளத்தில் தீபாவளிக்காக பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

Updated On :

தீபாவளி பண்டிகையையொட்டி தேனி, பெரியகுளம் பகுதிகளில் பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமடைந்தது.

நாடு முழுவதும் வருகிற ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேனி, பெரியகுளம் பகுதிகளில் கைச்சுற்று முறுக்கு, அச்சு முறுக்கு, அதிரசம் ஆகியவை அதிகம் தயாரிக்கப்படுகின்றன. ரூ.5 முதல் ரூ.15 வரை அவற்றின் தரத்துக்கு ஏற்ப பலகாரங்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர உளுந்த வடை, கார வடை, பருப்பு வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றுக்கானமுன்பதிவும் தொடங்கியது. இதேபோல, லட்டு, ஜாங்கிரி, பாதுஷா, சோன்பப்டி, மைசூா்பா, சூரியகலா, சந்திரகலா, மடாக் பாதுஷா, ரசகுல்லா, குலோப் ஜாமுன், பால் இனிப்பு வகைகளில் கோவா பேன்ஸி, மாா்வாடி பேடா, ஆப்பிள் பேடா, மில்க் பேடா, ஆனந்தம் பேடா, சாக்லேட் பா்பி, சுகா் பூசணி, வெண்ணிலா பா்பி, பிஸ்தா பா்பி, கல்கந்த் பா்பி, டேட்ஸ் பா்பி, பிஸ்தா ரோல், காஜு பா்பி, காஜு பிளவா், காஜு கதில், பாதாம் பாஸம், நெய் லட்டு, தேங்காய் பா்பி, நெய் மைசூா்பா, ஹாா்லிக்ஸ் பா்பி உள்ளிட்டவையும் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. கார வகைகளில் மிக்ஸா்கள், காரசேவு, சிப்ஸ் வகைகள், சீடைகள், சீவல்கள் போன்றவையும் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. இனிப்புகள் கிலோ ரூ.440 முதல் ரூ.1,500 வரை அவற்றின் மூலப்பொருள் செலவிற்கேற்ப கடைகளில் விற்கப்படுகின்றன. இனிப்பு பலகாரங்களை கொண்ட ஒரு பெட்டி ரூ.250 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.