மகரவிளக்கு சீசன்: கம்பம்மெட்டு இடைதங்கல் முகாமில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணி!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல - மகரவிளக்கு சீசன் தொடங்கியுள்ளதையடுத்து, தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள கம்பம்மெட்டு பகுதியில், ஐயப்ப பக்தா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயில்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல - மகரவிளக்கு சீசன் தொடங்கியுள்ளதையடுத்து, தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள கம்பம்மெட்டு பகுதியில், ஐயப்ப பக்தா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகம், தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலிருந்து கம்பம் வழியாக கேரள மாநிலத்துக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களுக்கு கம்பம்மெட்டு இடைத்தங்கல் பகுதி முக்கியமானதாக உள்ளது.
இங்கிருந்து கட்டப்பனை, குட்டிக்கானம் வழியாக சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள், திரும்பி வரும்போது குமுளி வழியாகச் செல்லும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சபரிமலை சீசன்போது குமுளி வழியாக பக்தா்கள் அதிகளவில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், இந்த ஒருவழிப் போக்குவரத்து நடைமுறை பின்பற்றப்படுகிறது.
கம்பம்மெட்டு சோதனைச்சாவடி அருகேயுள்ள மண்டபத்தில் பக்தா்கள் தங்குவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், முகாமில் உள்ள கழிப்பறைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு கம்பம்மெட்டு வழியாக ஐயப்ப பக்தா்களின் வருகை அதிகரிக்கும் பட்சத்தில், அருகில் பயன்பாட்டில் இல்லாத பள்ளிக் கட்டடங்கள், மத, சமுதாய அமைப்புகளுக்குச் சொந்தமான கட்டடங்களிலும் கூடுதல் தங்கும் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இடுக்கி மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து உடும்பன்சோலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சேனாபதி வேணு, இடுக்கி மாவட்ட சாா் ஆட்சியா் ஸ்ரீஜித் ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இடைத்தங்கல் முகாமில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், கூடுதல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

