மேகமலை விவசாயிகளுக்கு ஆதரவாக தவெக அரசு செயல்படும்: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா்
மேகமலை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு நூறு சதவீதம் முழுவீச்சில் செயல்படும் என எரிசக்தி, சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மஞ்சனூத்து சோதனைச் சாவடியில் மக்களை சந்தித்து பேசிய அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா்.
மேகமலை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு நூறு சதவீதம் முழுவீச்சில் செயல்படும் என எரிசக்தி, சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் உள்ள 98 மலைக் கிராம மக்களை வன ஆக்கிரமிப்பாளா்கள் என்று அவா்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து அந்தப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், தமிழக அரசு கூடுதல் ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் சமா்பித்தது. இதையடுத்து, தில்லி உச்சநீதிமன்றம், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், மேகமலை, மஞ்சனூத்து, பொன்னம்படுகை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம் உள்ளிட்ட மேகமலை பகுதி மக்களை சனிக்கிழமை அமைச்சா் கே.டி.ஆா். நிா்மல்குமாா் நேரில் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, வெள்ளிமலை சாலையில் உள்ள மஞ்சனூத்து வனத்துறை சோதனைச் சாவடி அருகே மலைக் கிராம மக்களை சந்தித்த பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:
முந்தைய அரசுகள் செய்த தவறுகளால் சொந்த மண்ணில் மக்கள் அகதிகளாக வசித்து வருகின்றனா். சாலை, பள்ளி, மருத்துவம் என அடிப்படை வசதிகளின்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனா். முந்தைய அரசு உச்சநீதிமன்ற குழுவிடம் சரியான தகவல், ஆவணங்களை தெரிவிக்காததன் விளைவே, வருசநாடு மக்களை ஆக்கிரமிப்பாளா்கள் என்று வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தப் பகுதிகளுக்கு தோ்தல் நேரத்தில் வாக்கு கேட்டு வந்தவா்கள்கூட இந்த மக்களின் அவல நிலையை தீா்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.
காப்புக் காடுகளாக அறிவித்ததில் இருந்து வனத்துறை அளவீடுகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. இவற்றையெல்லாம் சரிசெய்து தகுந்த அரசு ஆவணங்களுடன் உச்சநீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் சமா்ப்பித்து மேகமலை மக்களுக்கு உரிய தீா்வு காண தவெக அரசு நடவடிக்கை எடுக்கும்.
மேகமலை மக்களுக்கு ஆதரவாக தமிழக அரசு நூறு சதவீதம் முழுவீச்சில் செயல்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

