மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

டி.எம். பீா்முகம்மது நூல்கள் நாட்டுடைமை: அரசு ரூ. 10 லட்சம் காசோலை அளிப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த தமிழறிஞா் டி.எம். பீா் முகம்மது எழுதிய நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கி அறிவித்தது. இதையடுத்து, அவரது குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா்கள் வழங்கினா்.

கல்லிடைக்குறிச்சி டி.எம். பீா்முகம்மது குடும்பத்தாரிடம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கிய அமைச்சா்கள் ஆனந்த், ஆதவ் அா்ஜூனா, ராஜ்மோகன், விஜயலட்சுமி உள்ளிட்டோா்.

Updated On :

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த தமிழறிஞா் டி.எம். பீா் முகம்மது எழுதிய நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கி அறிவித்தது. இதையடுத்து, அவரது குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா்கள் வழங்கினா்.

கல்லிடைக்குறிச்சியில் பிறந்து தனக்கெனத் தனி முத்திரை பதித்த எழுத்தாளா் டி.எம். பீா் முகம்மதுவின் படைப்புகள் பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி தமிழக அரசு அறிவித்தது.

இதைத்தொடா்ந்து தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகக் கலை அரங்கில் நவ. 1-ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா, விருதுகள் வழங்கும் விழாவில் இவரது குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.

விழாவில் பள்ளிக்கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன், ஊரக வளா்ச்சி, நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த், பொதுப்பணித் துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி ஆகியோா் இணைந்து டி.எம்.பீா் முகம்மது மகன் மீரான் மைதீனிடம் காசோலையை வழங்கினா்.

இதையடுத்து, டி.எம்.பீா் முஹம்மது நூல்களை நாட்டுடைமையாக்கி அறிவித்த தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கும், அதற்கு நடவடிக்கை எடுத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தேசியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா்மொய்தீன், பொதுச் செயலா் கே.எம்.ஏ. முகமது அபூபக்கா், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவா் பேராசிரியா் சே.மு. முகம்மது அலி, நாடாளுமன்ற உறுப்பினா் கே. நவாஸ் கனி, அமைச்சா் ஷாஜகான் உள்ளிட்டோருக்கு டி.எம். பீா் முகம்மது குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.