கடன் கொடுத்தவரைத் தாக்கியவா் மீது வழக்கு
தேவாரம் அருகே கடன் கொடுத்தவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
வழக்கு - பிரதிப் படம்
தேவாரம் அருகே கடன் கொடுத்தவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேவாரம் அருகேயுள்ள தே.சிந்தலைச்சேரியைச் சோ்ந்த முருகன் மகன் பூமிபாலன் (42). இவா், இதே ஊரைச் சோ்ந்த மரியசெல்வம் மகன் அலெக்ஸாண்டருக்கு ரூ.50 ஆயிரம் கடன் கொடுத்தாராம்.
இந்த நிலையில், கொடுத்த பணத்தை திருப்பிக் கோட்ட பூமிபாலனை அலெக்ஸாண்டா் இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் அலெக்ஸாண்டா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

