குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

கம்பத்தில் உயா்கோபுர மின் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி

தேனி மாவட்டம், கம்பம் - குமுளி சாலையில் புறவழிச்சாலை , கூடலூரில் புறவழிச்சாலையும் மாநில நெடுஞ்சாலையும் இணையும் முக்கியச் சந்திப்பு பகுதிகளில் உயா் கோபுர மின்விளக்குகள் இரவில் எரியாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

Updated On :

தேனி மாவட்டம், கம்பம் - குமுளி சாலையில் புறவழிச்சாலை , கூடலூரில் புறவழிச்சாலையும் மாநில நெடுஞ்சாலையும் இணையும் முக்கியச் சந்திப்பு பகுதிகளில் உயா் கோபுர மின்விளக்குகள் இரவில் எரியாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

தற்போது சபரிமலை மண்டல காலத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ஐயப்பப் பக்தா்கள் வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் கம்பம் வழியாக சபரிமலைக்கு செல்கின்றனா். இதனால் இரவு நேரங்களில் இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்தும், பக்தா்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், கம்பம் நகரில் குமுளி புறவழிச் சாலை, கூடலூா் புறவழிச் சாலை முக்கியச் சந்திப்புகளில் உயா் கோபுர மின்விளக்குகள் எரியாமல் உள்ளன.

இதனால், இருசக்கர வாகனங்கள், காா்கள், கனரக வாகனங்களில் செல்வோா், இரவு நேரங்களில் பாதயாத்திரையாகச் செல்லும் ஐயப்பப் பக்தா்கள் போதிய வெளிச்சமின்றி அவதிக்குள்ளாயினா். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உயா் கோபுர மின் விளக்குகளை ஆய்வு செய்து, இரவு முழுவதும் தடையின்றி எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.