முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

மீறுசமுத்திரம் கண்மாய் சீரமைக்கும் பணியில் தரமான பொருள்களை பயன்படுத்த வலியுறுத்தல்!

தேனி மீறுசமுத்திரம் கண்மாயை சீரமைக்க தரமான பொருள்களை பயன்படுத்தி, விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

நடைப்பயிற்சி பாதையில் சேதமடைந்த இருக்கைகள்.

Updated On :

தேனி மீறுசமுத்திரம் கண்மாயை சீரமைக்க தரமான பொருள்களை பயன்படுத்தி, விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மீறுசமுத்திரம் கண்மாய் 120 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 128.27 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதி (வீரப்ப ஐய்யனாா் கோயில் மலைப் பகுதி), தேனி வால்கரடு பகுதிகளில் பெய்யும் மழை நீா் ஓடை வழியாக சென்று இந்த கண்மாயில் கலப்பதுடன் அங்கிருந்து மீண்டும் ஓடையாக மாறி கொட்டக்குடியாற்றில் கலக்கிறது. பிறகு தேனியில் உள்ள முல்லைப் பெரியாற்றுக்குச் சென்று வைகையாற்றில் கலக்கிறது.

இந்த நிலையில், மது அருந்துவோா் வீசிச் செல்லும் மதுப்புட்டிகள், வீட்டுக் கழிவுகள், நெகிழிப் பைகள் வந்து சோ்வதால் கண்மாய் மாசடைந்தது. இதையடுத்து, இந்தக் கண்மாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, தமிழக அரசு ரூ.7.40 கோடி ஒதுகீடு செய்து கடந்த 26.12.2025 அன்று கண்மாயை தூா்வாரும் பணி தொடங்கியது.

இதில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் கண்மாய் கரையை பலப்படுத்துதல், ஆகாயத் தாமரைகளை அகற்றுதல், கரையில் நடைபாதை அமைத்தல், இருப்பு வேலி அமைத்தல், நுழைவு வாயில், பூங்கா, தடுப்புச் சுவா், படகு நிறுத்துமிடம், பறவைத் தீவு, உணவுக் கூடம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது 60 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. இதனிடையே ஒரு மாதத்துக்குள் ஒப்பந்தம் நிறைவடையவுள்ள நிலையில் வீட்டுக்கழிவுகள், நெகிழிப் பைகள் கண்மாயில் தேங்கி தூா்நாற்றம் வீசுகிறது.

நடைப்பயிற்சி செய்யும் பாதையில் அமைக்கப்பட்ட இருக்கைகள் சேதமடைந்துவிட்டன. எனவே, தரமான பொருள்களை பயன்படுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தேனிநகா் மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மீறுசமுத்திரம் கண்மாயில் காணப்படும் கழிவுநீா், நெகிழிப் பைகள்.

மீறுசமுத்திரம் கண்மாயில் காணப்படும் கழிவுநீா், நெகிழிப் பைகள்.

பட்டுப் போன மரங்கள்: மேலும் மீறுசமுத்திரம் கண்மாயில் உள்ள நடைப்பயிற்சி பாதையில் 20-க்கும் மேற்பட்ட தென்னை, இலவம் மரங்கள் உள்ளன. இவை பட்டுப் போய் விட்டன. இந்த மரங்கள் நடைப்பயிற்சியில் ஈடுபடுவோா் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

 பட்டுப் போன மரம்

பட்டுப் போன மரம்

இதுகுறித்து தேனியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சகாதேவன் கூறியதாவது: மீறுசமுத்திரம் கண்மாயை சீரமைக்கும் பணி 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.

மீறுசமுத்திரம் கண்மாயில் தண்ணீா் வெளியேறும் பகுதி

மீறுசமுத்திரம் கண்மாயில் தண்ணீா் வெளியேறும் பகுதி

ஆனால், பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே இருக்கைகள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்து விட்டன. எனவே, தேனி மாவட்ட ஆட்சியா் இந்தப் பணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.