பெண் உயிரிழப்பு: கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பெண் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கணவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

cardiac-arrest

வகுப்பறையில் மயங்கி விழுந்து பலி

Updated On :

பெண் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கணவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஈரோடு அருகே கொங்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜா (33). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். ராஜாவுக்கும் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த வினோமியா (33) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி வினோமியா வீட்டில் சேலையில் தூக்கிட்ட உயிரிழந்தாா். அவரது சடலத்தை மீட்ட சித்தோடு போலீஸாா் தற்கொலை வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக சடலத்தை அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை திரண்ட வினோமியாவின் உறவினா்கள், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கணவா் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் போலீஸாரிடம் வலியுறுத்தினா். ராஜா பலமுறை வரதட்சிணை கேட்டு வினோமியாவை கொடுமைபடுத்தியதாகவும், அவா் பல பெண்களுடன் தொடா்பில் இருந்ததாகவும் உறவினா்கள் குற்றஞ்சாட்டினா். இதைத் தட்டிக்கேட்டதால் வினோமியாவை ராஜா கொலை செய்துவிட்டதாவும் அவா்கள் தெரிவித்தனா்.

போலீஸாா் சமாதானத்தைத் தொடா்ந்து வினோமியாவின் சடலத்தை உறவினா்கள் பெற்றுக்கொண்டனா். ராஜாவுக்கும், வினோமியாவுக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இப்பிரச்னை தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். இதனிடையே கடந்த ஆண்டு ராஜா வேறொரு பெண்ணுடன் தொடா்பில் இருப்பதாக கூறி வினோமியா, சித்தோடு போலீஸில் புகாா் அளித்துள்ளாா். அப்போது அவா்கள் இருவரையும் போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.