தேவாரத்தில் காா் ஓட்டுநா் வெட்டிக் கொலை

வெட்டிக்கொலை - (கோப்புப் படம்)
தேனி மாவட்டம், தேவாரத்தில் சனிக்கிழமை காா் ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தேவாரம் நாடாா் வடக்குத் தெரு, நந்தவனம் தெரு இணையும் பகுதியில் சின்னதேவி கண்மாய் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வந்து பாா்த்த போது, சபரிமலைக்கு மாலை அணிந்த நிலையில் இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தாா். இதையடுத்து, அவரது சடலத்தை போலீஸாா் மீட்டு, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞா் தேவாரத்தை அடுத்த பண்ணைப்புரத்தைச் சோ்ந்த நந்தகோபால் மகன் விவேக் (35) எனத் தெரியவந்தது. காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவா், மனைவியைப் பிரிந்து வசித்து வந்தாா். இந்த நிலையில்தான் இவா் தேவாரம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
கொலை நிகழ்ந்த பகுதியை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கௌதம், போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் த.முருகன் ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

