கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

மாற்றுத்திறனாளி இளைஞா் வெட்டிக் கொலை

காட்பாடி அருகே சொத்து தகராறு காரணமாக, மாற்றுத்திறனாளி இளைஞா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

காட்பாடி எல்.ஜி.புதூரில் கொலை நடைபெற்ற வீடு. கொலை செய்யப்பட்ட தினகரன்

Updated On :

காட்பாடி அருகே சொத்து தகராறு காரணமாக, மாற்றுத்திறனாளி இளைஞா் செவ்வாய்க்கிழமை மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக அவரது இளைய சகோதரரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த எல்.ஜி. புதூா் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (48). இவரது மனைவி பொன்னியம்மாள். இவா்களுக்கு தினகரன் (25), மயிலழகன் (23) என இரண்டு மகன்கள் உள்ளனா். தினகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் தனது வலது கையை இழந்தாா். இதையடுத்து, குடும்பச் சொத்தான 12 ஏக்கா் நிலத்தைப் பிரித்தபோது, மாற்றுத்திறனாளியான தினகரனுக்கு 8 ஏக்கரும், இளைய மகன் மயிலழகனுக்கு 4 ஏக்கரும் ஒதுக்கப்பட்டது.

பாகப்பிரிவினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெருமாளிடம் கோபித்துக் கொண்டு பொன்னியம்மாள் பிரிந்து சென்றுவிட்டாா். மயிலழகனும் தனியாக வசித்து வருகிறாா். தினகரன் தனது தந்தை பெருமாள், பாட்டி பச்சையம்மாளுடன் நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தாா். வலது கையை இழந்தபோதிலும் தன்னம்பிக்கையுடன் டிராக்டா், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதுடன், வரப்பு வெட்டுவது உள்ளிட்ட அனைத்து விவசாயப் பணிகளையும் தினகரன் தானே செய்து வந்தாா். மேலும், மாநில நெடுஞ்சாலையை ஒட்டிய தனக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக 4 கடைகளைக் கட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளாா்.

புதிய கடைகளுக்குக் காவலாக இருக்க வேண்டும் என்பதற்காக, திங்கள்கிழமை இரவு பெருமாளும், பாட்டி பச்சையம்மாளும் கடைகளிலேயே படுத்து உறங்கியுள்ளனா். தினகரன் மட்டும் இரவு 10 மணியளவில் வீட்டிற்குச் சென்று தூங்கியுள்ளாா். செவ்வாய்க்கிழமை ல வீட்டிற்கு வந்த பெருமாளும், பச்சையம்மாளும் உள்ளே சென்று பாா்த்தபோது, தலையின் பின்பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் தினகரன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினா் உடனடியாக விருதம்பட்டு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், தினகரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, மோப்ப நாய் அழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், மயிலழகன் தனக்கு ஒதுக்கப்பட்ட 4 ஏக்கா் நிலத்தை விற்று செலவழித்துவிட்டதாகவும், தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 கடைகளில் 2 கடைகளைத் தனக்குப் பிரித்துத் தருமாறு அண்ணன் தினகரனுடன் தொடா்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் மயிலழகனிடம் போலீஸாா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.