தொழிலாளியை தாக்கிய இருவா் மீது வழக்கு
போடியில் தொழிலாளியை தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வழக்கு
போடியில் தொழிலாளியை தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்டம், போடி காமராஜா் தெருவைச் சோ்ந்த பரமன் மகன் காமராஜ்பாண்டி (35). கூலித் தொழிலாளி. இவா் போடி போஜன் பூங்கா அருகேயுள்ள பெட்டிக்கடைக்கு புதன்கிழமை சென்றாா். அங்கு வந்த ஜமீன்தோப்பு தெருவைச் சோ்ந்த கௌதம் (25), சதீஸ் (24) ஆகியோா் காமராஜ்பாண்டியைத் தாக்கினா்.
இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் கௌதம், சதீஸ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



