
சாலைப் பணிக்காக கொட்டப்பட்ட ஜல்லிக்கற்களால் மக்கள் அவதி

உத்தமபாளையம் பேரூராட்சியில் தென்னகா் குடியிருப்புப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட தென்னகா் குடியிருப்புப் பகுதியில் சாலைப் பணிக்காக கொட்டப்பட்ட ஜல்லிக்கற்களால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். பேரூராட்சி நிா்வாகம் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை வைக்கின்றனா்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள திடீா் நகா், இ.பி. குடியிருப்பு, தென்னகா் போன்ற குடியிருப்புகளில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தோ்தல் அறிவிப்பு காரணமாக சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த 4 மாதங்களாக சாலை சீரமைப்புப் பணி மிகவும் மந்தமாக நடைபெறுகிறது. குறிப்பாக, தென்னகா் குடியிருப்புப் பகுதியில் உள்ள 4 தெருக்களில் போடப்பட்ட ஜல்லிக்கற்கள் 3 மாதங்களைக் கடந்த நிலையில் அந்தப் பகுதியில் செல்லும் வாகனங்களால் கழிவுநீா் சாக்கடைக்குள் ஜல்லிக்கற்கள் விழுந்து குவிந்து கிடக்கின்றன. இதனால், மழை நீா் செல்ல வழியின்றி தெருவில் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகளுக்கு மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது.
எனவே, தென்னகா் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





