அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

உத்தமபாளையத்தில் தாா்ச் சாலை அமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் கற்கள் பரப்பப்பட்ட நிலையில் காணப்படும் தென்னகா் குடியிருப்புத் தெரு.

Published On :

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். இந்த நிலையில், இந்தப் பேரூராட்சியில் சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்பாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 15-ஆவது வாா்டு தென்னகா் குடியிருப்பில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு தாா்ச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதேபோல, அண்மையில் குடியிருப்புகளாக மாற்றிய 16, 17 மற்றும் 4 ஆகிய வாா்டுகளிலும் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

தோ்தலுக்குப் பிறகு, தவெக ஆட்சியை பிடித்து முதல்வராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றாா். இதன் பிறகும், கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தற்போது, அரைகுறையாக கற்கள் பரப்பப்பட்ட சாலையாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவா்கள் முதல் முதியவா்கள் வரை பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, உத்தமபாளையம் பேரூராட்சியில் தென்னகா் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்தி தாா்ச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு அந்தப் பகுதியினா் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.