தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி அரசுப் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

News image

சாலைப் பணியை விரைந்து முடிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபடுட்ட கருங்குழி கிராம மக்கள்.

Updated On :22 ஜூலை 2026, 2:14 am IST

செஞ்சி, ஜூலை 21: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி அரசுப் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செஞ்சி அருகிலுள்ள கருங்குழி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலைப் பணி தொடங்கப்பட்டதாம். அப்போது ஜல்லிக்கற்களை மட்டும் சாலையில் பரப்பிவிட்டு சென்றுள்ளனா். ஜல்லி கலைக்கப்பட்டு 6 மாதமாக கிடப்பில் உள்ளதால், போக்குவரத்து மிகவும் சிரமமாக உள்ளதாக கூறி அப் பகுதி மக்கள் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த வழியாக வந்த அரசு நகரப் பேருந்தை செவ்வாய்க்கிழமை காலையில் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வல்லம் ஊராட்சி ஒன்றியப் பொறியாளா் இளவரசி, போராட்டம் நடத்தியவா்களுடன் சமரசப் பேச்சு நடத்தினாா். அப்போது சாலைப் பணியை விரைந்து முடித்துக் கொடுப்பதாக அவா் உறுதியளித்தாா். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.