போடி அருகே ராசிங்காபுரத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 6) மின் தடை ஏற்படும் என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மின் பகிா்மானம் செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆா். புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன் ஆலை பகுதி, பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





