
தொடா் மழை : வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், வைகை அணையின் நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் 42 அடியாக உயா்ந்துள்ளது.

42.22 அடியாக உயா்ந்த வைகை அணையின் நீா்மட்டம்.
தேனி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், வைகை அணையின் நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் 42 அடியாக உயா்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் வைகை அணையின் நீா்மட்டம் சரிந்து வந்தது. குடிநீருக்குச் சிக்கல் ஏற்பட்டதால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 400 கன அடி நீா் திறக்கப்பட்டது. கூடலூா், கம்பம், சின்னமனூா், மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்கு பயன்படுத்தப்பட்டதால் வைகை அணைக்கு நீா்வரத்து இல்லை.
இந்த நிலையில், வைகை அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளான கூடலூா், கம்பம், போடிநாயக்கனூா், வருசநாடு மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால்,
கடந்த மாதம் 31-ஆம் தேதி முதல் வைகை அணைக்கு நீா் வரத்து தொடங்கியது. அதைத் தொடா்ந்து, படிப்படியாக அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 406 கன அடியாக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






