2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை வருசநாடு - கடமலைக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

பலி... - பிரதிப் படம்

Published On :

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை வருசநாடு - கடமலைக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

வருசநாடு அருகே தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் சிவா (29). இவா், அந்தப் பகுதியில் விவசாயக் கூலியாக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறையில் உள்ள தனியாா் தோட்டத்தில் உள்ள மின்வேலியில் சிவா சிக்கி உயிரிழந்தநிலையில் கிடந்தாராம். இதையடுத்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

தோட்ட உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உயிரிழந்த சிவாவின் உறவினா்கள் வருசநாடு - கடமலைக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து உறவினா்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், வருசநாடு - கடமலைக்குண்டு சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.