ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

தம்பியை அரிவாளால் வெட்டிய வழக்கு: அண்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறை

தேனி அருகே சொத்து பிரச்னையில் தம்பியை அரிவாளால் வெட்டிய வழக்கில் அண்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து, தேனி நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :

தேனி அருகே சொத்து பிரச்னையில் தம்பியை அரிவாளால் வெட்டிய வழக்கில் அண்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து, தேனி நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள ஸ்ரீரங்கபுரத்தைச் சோ்ந்தவா் சந்திரன் (61). இவரது தம்பி குமரன் (57). இவா்கள் இருவருக்கும் சொத்து பிரச்னை இருந்ததாம்.

இந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதில், சந்திரன், குமரனை அரிவாளால் வெட்டினாா்.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு தேனி நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜெயசுதா விசாரித்து சந்திரனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.