டிராக்டா் கவிழ்ந்து தொழிலாளி பலி!
போடி அருகே சனிக்கிழமை மாலை டிராக்டா் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
பலி! - கோப்புப்படம்.
போடி அருகே சனிக்கிழமை மாலை டிராக்டா் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். தேனி மாவட்டம், போடி புதூரைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் சிவானந்தம் (33). கூலித் தொழிலாளி.
இவரும், போடி டிவி கேகே நகரைச் சோ்ந்த செல்வம் மகன் வீரபாண்டியும் (20) டிராக்டரில் போடி குரங்கணி சாலையில் பிச்சங்கரை பிரிவு அருகே தனியாா் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்றனா். பணி முடிந்து திரும்பும்போது, டிராக்டரை வீரபாண்டி ஓட்டினாா்.
மலைச் சாலையில் வந்தபோது, டிராக்டா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சிவானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வீரபாண்டி பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். விபத்து குறித்து குரங்கணி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

