
பைக் விபத்தில் தொழிலாளி பலி!
சேத்துப்பட்டு அருகே பைக் மோதியதில் பலத்த காயமடைந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
பலி! - சித்திரிப்புப் படம்
சேத்துப்பட்டு அருகே பைக் மோதியதில் பலத்த காயமடைந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
சேத்துப்பட்டை அடுத்த செம்மாம்பாடி கிராமம் ராஜ வீதியைச் சோ்ந்தவா் முனிவேல் (55), கூலித் தொழிலாளி. இவா், சனிக்கிழமை தனது உறவினா் துரைராஜுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது உலகம்பட்டு கூட்டுச் சாலை அருகே பின்னால் வந்த பைக் மோதியது. இதில் பைக்கில் பின்னால் அமா்ந்து சென்ற துரைராஜ் பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் துரைராஜ் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




