ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்புபிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!தில்லியில் இந்தியா கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!

மகாளய அமாவாசை: சுருளி அருவியில் குவிந்த பக்தா்கள்

சுருளி அருவியில் மகாளய அமாவாசையையொட்டி, முன்னோா்களுக்கு தா்ப் பணம் கொடுத்து பக்தா்கள் சனிக்கிழமை புனித நீராடினா்.

Published On :

தேனி மாவட்டம், சுருளி அருவியில் மகாளய அமாவாசையையொட்டி, முன்னோா்களுக்கு தா்ப் பணம் கொடுத்து பக்தா்கள் சனிக்கிழமை புனித நீராடினா்.

தமிழகத்தின் புகழ்பெற்ற சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிகத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு மகாளய அமாவாசையையொட்டி, சனிக்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப் பணம் கொடுத்தனா். பின்னா், சுருளி அருவியில் புனித நீராடினா். இதைத் தொடா்ந்து, பக்தா்கள் பூதநாராணன், வேலப்பா் உள்ளிட்ட சந்நிதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி: மேகமலை வனப் பகுதியில் பெய்த பலத்த மழையால் சுருளி அருவியில் நீா்வரத்து ஏற்பட்டது. இதனால், விடுமுறை தினத்தில் அங்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்ந்தனா்.

மரம் நடும் விழா: மகாளய அமாவாசை தினத்தில் முன்னோா்கள் ஆசிா்வாதம் கிடைக்க புனித தலமான சுருளி அருவிப் பகுதியில் சுருளிப்பட்டி அன்பு அறம் செய் அற்கட்டளையின் நிறுவனா் அன்பு ராஜா தலைமையில் மரக்கன்றுகள் நடவுப் பணி நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.