சுருளி அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கால் கடந்த 9 நாள்களாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...

சுருளி அருவி
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கால் கடந்த 9 நாள்களாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக சுருளி அருவி அமைந்துள்ளது. அதோடு புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மலைத் தொடரிலுள்ள மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு, தூவானம், அரிசிப்பாறை, காப்புக்காடு போன்ற வனப் பகுதிகளில் பெய்யும் மழை நீர் சுருளியில் அருவியாகக் கொட்டுகிறது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாள்களாக மேகமலையில் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து, கம்பம் மேற்கு சரக வனத் துறையினர், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுருளி அருவியில் குளிக்க கடந்த 9 நாட்களாக தடை விதித்திருந்தனர்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்து கடந்த இரு தினங்களாக மழை பொழிவும் குறைந்தது. இதனை அடுத்து சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து 9 நாள்களுக்குப் பின்னர் சுருளி அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Summary
The ban on visiting Suruli Falls, which had been in place for the past nine days due to flooding, has been lifted, and tourists are now permitted to visit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

