சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு 4-வது நாளாக தடை!
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை...

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - Dinamani
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த மலைத் தொடரிலுள்ள மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு, தூவானம், அரிசிப்பாறை, காப்புக்காடு போன்ற வனப் பகுதிகளில் பெய்யும் மழை நீா் சுருளியில் அருவியாகக் கொட்டுகிறது.
கடந்த சில நாள்களாக மேகமலையில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால், சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, கம்பம் மேற்கு சரக வனத் துறையினா் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க 4 ஆவது நாளாக வியாழக்கிழமையும் தடை விதித்தனா்.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு செல்லவோ, குளிக்கவோ வனத்துறை விதித்த தடையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Summary
Flooding at Suruli Falls: Tourists banned for 4th day
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


