தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

கிராவல் மண் கடத்திய டிராக்டா் ஓட்டுநா் கைது

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கிராவல் மண் கடத்திய டிராக்டா் ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கிராவல் மண் கடத்திய டிராக்டா் ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடமலைக்குண்டு பகுதியில் அரசின் அனுமதி பெறமால் சட்ட விரோதமாக லாரிகள் கிராவல் மண் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடமலைக்குண்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்தாலம்பாறைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் சிங்கத்தை (55) கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.