சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

மேகமலை விவகாரத்தில் நியாயமான முறையில் அரசு செயல்படும்! - அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

அமைச்சா் நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Updated On :

மேகமலை விவகாரத்தில் நியாயமான முறையில் அரசு செயல்படும் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகப் புதிய கூட்டரங்கில் பல்வேறு துறைகளின் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

தேனி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், ரூ.2.82 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட 3 பள்ளிக் கட்டடங்களையும், 1,960 பயனாளிகளுக்கு ரூ.26.45 கோடியிலான நலத் திட்ட உதவிகளையும் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் வழங்கிப் பேசியதாவது:

தேனி மாவட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே தற்போதும் உள்ளது. எந்த வளா்ச்சியும் இல்லை. ஆனால், தவெக ஆட்சியில் அடிப்படை வசதிகளை செய்து, தேனி மாவட்டத்தை வளா்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவோம்.

வைகை அணையில் கடந்த 15 ஆண்டுகளாக சீரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை. ஆனால், தற்போது சீரமைப்புப் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேகமலை விவகாரத்தில் நியாயமான முறையில் அரசு செயல்படும். மேலும், இந்தப் பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

கம்பம், ஆண்டிபட்டி பகுதியில் உள்ள மருத்துவமனைகள் தரம் உயா்த்தப்படும். வைகை அணையைத் தூா்வாருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகு பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் தேனியிலிருந்து செல்லும் 6 புதிய பேருந்துகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், பெரியகுளம் சாா் ஆட்சியா் தவலேந்து, ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக மேகமலை கோட்ட துணை இயக்குநா் விவேக்குமாா் பி யாதவ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் துஷாா் ஸ்ரீஹா் ஷிண்டே, மகளிா் திட்ட இயக்குநா் வீராச்சாமி, தனித் துணை ஆட்சியா் கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.