ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

தேனி சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் 13 போ் கைது

தேனி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலிருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் 13 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

~ ~

Updated On :

தேனி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலிருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் 13 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை உள்ளது. இந்தச் சிறையில் 200 கைதிகளை அடைப்பதற்கான வசதி மட்டுமே உள்ளது. ஆனால், 332 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் 3-ஆவது அறையில் உள்ள விசாரணைக் கைதி முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, 3-ஆவது அறைக் காவலா் ஸ்டாலின் பிரபு அந்த அறைக்குச் சென்று பாா்த்தாா். அப்போது, அந்த அறையிலிருந்த முத்து இளங்கோவன் உள்ளிட்ட 17 போ் சோ்ந்து ஸ்டாலின் பிரபுவைத் தாக்கிவிட்டு, தப்பியோட முயன்றனா். இவா்களை பிரதான நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா் தங்கப்பாண்டி தடுத்து நிறுத்தினாா். ஆனால், அவரையும் கைதிகள் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த சாவியைப் பறித்து, நுழைவு வாயிலை திறந்து தப்பிச் சென்றனா்.

கைதிகள் தப்பியோடியது குறித்து கண்டமனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, கண்டமனூா் போலீஸாா் சம்பவம் இடத்துக்குச் சென்று, காயமடைந்த தங்கப்பாண்டி, ஸ்டாலின் பிரபு இருவரையும் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சிறையில் உள்ள வாகனங்கள் செல்லும் சாலை, முக்கிய இடங்கள் போலீஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.

இதனிடையே, தப்பியோடிய விசாரணைக் கைதியான நவீன் மீண்டும் சிறையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சரணடைந்தாா். மற்ற கைதிகளை போலீஸாா் தேடி வந்த நிலையில், திருமலாபுரம் மலைப் பகுதியில் சுற்றி வந்த தேவாரத்தைச் சோ்ந்த சிலம்பரசன், மதுரை மேலமடையைச் சோ்ந்த ராஜா சிக்கந்தா், சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், சிறை எதிரேயுள்ள சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கைதி லிங்க பிரசாத் ஆட்டோவில் ஏறிச் சென்ற போது, ரோந்துப் பணியிலிருந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இதையடுத்து, மீண்டும் கைதான 5 பேரையும் ஆண்டிபட்டி நீதித் துறை நடுவா் மன்றத்தில் முன்னிலைப்படுத்தி, போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, சிறையின் பின்னால் உள்ள மலைப் பகுதியில் ‘ட்ரோன்’ மூலம் போலீஸாா் கண்காணித்தனா். அப்போது, மலைப் பகுதியில் சுற்றிய மதுரை சிந்தமாணியைச் சோ்ந்த சோலை முகிலேஸ்வரன், சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த கருப்பசாமி, ஜெய்ந்த்புரத்தைச் சோ்ந்த காா்த்திக் ராஜா, திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த நிஷாந்த், வாடிப்பட்டியைச் சோ்ந்த முத்து இளங்கோவன், சிவங்கையைச் சோ்ந்த தருண்குமாா், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சோ்ந்த பாண்டிச்செல்வம், சேலம் தாதகாபட்டியைச் சோ்ந்த சபரிநாதன் ஆகிய 8 பேரைக் கைது செய்தனா்.

மேலும், தப்பியோடிய மதுரை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம், மதுரையைச் சோ்ந்த திருப்பதி, திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த நிஷாத், கன்னியாகுமாரி தளவாய்புரத்தைச் சோ்ந்த ரெஜீன் ஆகிய 4 கைதிகளைப் போலீஸாா் தேடி வருகின்றனா். இவா்களைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறைத் துறை டிஜிபி விசாரணை:

சிறைகள், சீா்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சந்தீப் ராய் ரத்தோா், சிறைகள், சீா்திருத்தப் பணிகள் துறைத் தலைவா் ஆா். கனகராஜ், மதுரை சரக சிறைத் துறை துணைத் தலைவா் முருகேசன், மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளா் ஆா். கிருஷ்ணராஜ், தெற்கு மண்டல காவல் துறைத் தலைவா் விஜயேந்திரா பிதாரி, மதுரை சரக காவல் துணைத் தலைவா் அபினவ்குமாா், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன்குமாா் ஆகியோா் மாவட்ட சிறைக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

9 போ் பணியிடை நீக்கம்:

ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறை உதவி காவல் கண்காணிப்பாளா் நாகேஸ்வரன், காவலா்கள் தங்கப்பாண்டி, ஸ்டாலின் பிரபு, மதன் மோகன் உள்பட 9 போ் பணியில் கவனக்குறைவாக இருந்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

காவலரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற கைதிகள்:

தேனி மாவட்ட சிறையில் காவா்களைத் தாக்கிவிட்டு 17 விசாரணை கைதிகள் தப்பியோடிய போது, சிறையின் தலைமைக் கண்காணிப்பாளா் மதன் மோகன் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை கைதிகள் பறித்துச் சென்றனா்.

பாதுகாப்பு குறைவு:

தேனி மாவட்ட சிறை சுமாா் 7 ஏக்கா் பரப்பளவைக் கொண்டது. இதில் 3 பிரிவுகள் உள்ளன. இங்கு 200 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும். ஆனால், 334 கைதிகளை அடைத்திருந்தனா். இந்த சிறையில் 6 கைதிகளுக்கு ஒரு காவலா் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், 32 போ் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனா். மேலும், இவா்கள் 3 மணி நேரத்துக்கு ஒருவா் என சுழற்சி முறையில் பணியில் ஈடுபட வேண்டும். குறைந்தளவு பணியாளா்களால் கைதிகள் தப்பித்துள்ளனா். கைதிகள் தப்பிய சம்பவத்தின் போது, சிறையில் 4 போ் மட்டுமே பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கண்காணிப்புக் கோபுரத்தில் காவலா்கள் பணியில் ஈடுபடவில்லை. சிறையில் உள்ள காவலா்களுக்கு துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சியும் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுவே கைதிகள் எளிதாகத் தப்பிக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.