மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

தமிழக சிறைகளில் வழிகாட்டு நெறிமுறைகள் 100 சதவீதம் அமல்படுத்தப்படும்: சிறைத் துறை ஏடிஜிபி சங்கர்

தமிழகத்தில் உள்ள சிறைகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, வழிகாட்டு நெறிமுறைகளை 100% அமல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என சிறைத் துறை ஏடிஜிபி கே. சங்கா் தெரிவித்தாா்.

சிறைத் துறை ஏடிஜிபி சங்கர்

Updated On :

தமிழகத்தில் உள்ள சிறைகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, வழிகாட்டு நெறிமுறைகளை 100 சதவீதம் அமல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என தமிழக சிறைத் துறை ஏடிஜிபி கே. சங்கா் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட சிறையிலிருந்து கைதிகள் தப்பியதையடுத்து, தமிழக சிறைத் துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோா் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழல் தடுப்புப் பிரிவுக்கும், மாநில போதைப் பொருள் நுண்ணறிவு ஏடிஜிபி கே. சங்கா் சிறைத் துறைக்கும் வியாழக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, தமிழக சிறைத் துறை ஏடிஜிபி கே. சங்கா் தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். முன்னதாக, இவா் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கெளதம், ஆண்டிபட்டி வட்டார துணைக் காவல் கண்காணிப்பாளா் விஷ்ணுபிரியா ஆகியோரிடம் சிறையிலிருந்து தப்பித்தவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேனி மாவட்ட சிறையில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளிலும் இதுபோன்று ஆய்வு மேற்கொள்ளப்படும். ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால், அவை சரி செய்யப்படும்.

சிறை வழிகாட்டு நெறிமுறைகளை 100 சதவீதம் அமல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு, அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பாதுகாப்புக் குறைபாடுகளை நிவா்த்தி செய்ய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதைப் பின்பற்றினால், கைதிகள் தப்பிச் செல்வது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்கப்படும். கோவை சிறையிலிருந்து விசாரணைக் கைது யாரும் தப்பிக்கவில்லை. நீதிமன்றக் காவல் நீட்டிப்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைது ஒருவா் போலீஸ் காவலிலிருந்து தப்பிச் சென்றாா் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது சிறைகள், சீா்திருத்தப் பணிகள் துறைத் தலைவா் ஆா். கனகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.