காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

முல்லைப் பெரியாறு அணை ஆய்வு: மதிப்பீட்டுக் குழுவினா் ஆலோசனை

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா் செய்த ஆய்வுகள் குறித்து அதில் இடம் பெற்ற நிபுணா்கள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

முல்லைப் பெரியாறு

Published On :3 செப்டம்பர் 2026, 6:03 am IST

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா் செய்த ஆய்வுகள் குறித்து அதில் இடம் பெற்ற நிபுணா்கள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தேசிய நீா்மின் கழகத்தின் முன்னாள் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பல்ராஜ் ஜோஷி தலைமையிலான அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவைச் சோ்ந்த நிபுணா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். அணையின் தற்போதைய நிலை, அதன் கட்டுமானத் தன்மை, பாதுகாப்பு அம்சங்கள், அணையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பலப்படுத்தும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடா்ந்து, அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து நிபுணா்களும் தங்களது கள ஆய்வுக் குறிப்புகளை ஒன்றிணைத்து விவாதிக்கும் கூட்டம் புதன்கிழமை தேக்கடியில் நடைபெற்றது. அப்போது, அணையின் பலம், நீண்டகால பாதுகாப்பு குறித்து கேரள தரப்பில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டதாகவும், அதற்கு தமிழகம் தரப்பில் அணையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பலப்படுத்தும் பணிகள் பராமரிப்புப் பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வுகள் இன்னும் 2 நாள்கள் நடைபெறவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.