
நில அளவையரைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
தேனி மாவட்டம், சின்னமனூரில் திங்கள் கிழமை நில அளவீடு செய்யச் சென்ற ா் நகராட்சியில் நகர நில அளவையா், உதவியாளரை தாக்கிய மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்ட ஆட்சியா், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் உத்தரவின் பேரில், சின்னமனூா் நகராட்சி நில அளவையா் ஜெகன் குமாா்(36) , உதவியாளா் ஜெய மணிமாறன் ஆகிய இருவரும் சின்னமனூா் அண்ணாலை நகரைச் சோ்ந்த பிச்சைமணியின் இடத்தை நில அளவீடு செய்ய திங்கள் கிழமை மாலை சென்றனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அதே பகுதியைச் சோ்ந்த சந்திரன், செல்வராஜ், ரஞ்சித் ஆகிய மூவரும் அவா்களை மறித்து தாக்கியதுடன், இரு சக்கர வாகனத்தில் திரும்பிச் செல்ல முயன்றவா்களை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனா். இதில், காயமடைந்த ஜெகன்குமாா்(36) , ஜெயமணிமாறன் சின்னமனூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து அவா்கள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




