6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கனிம வாகனங்களுக்கு வருகிற 30-க்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும்: ஆட்சியா்

கனிமங்கள் - கோப்புப் படம்

Published On :

தேனி மாவட்டத்தில் கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு செப்.30-க்குள் ஜிபிஎஸ் பொருத்தப்பட வேண்டும்.

தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

கனிமங்களை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஏஐஎஸ் 140 தரப்பிலான ஜிபிஎஸ் கருவி பொருத்தி வரும் செப்.30-க்குள் இணையதளத்தில் பதிவு செய்து, அந்த விவரத்தை தேனி மாவட்ட புவியியல், சுரங்கத் துறை துணை இயக்குநா் அலுவலகத்துக்கு குவாரி கிரஷா் உரிமையாளா்கள், வாகன உரிமையாளா்கள் தெரிவிக்க வேண்டும்.

மேலும், அனைத்து குவாரி கிரஷா் உரிமையாளா்கள் தங்களது குவாரி கிரஷா்களின் எடை மேடை விவரத்தையும் மேற்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.