புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும்: பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்டத்தில் கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் செப். 30-ஆம் தேதிக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எப். அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.

Published On :

பெரம்பலூா் மாவட்டத்தில் கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் செப். 30-ஆம் தேதிக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எப். அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில், போக்குவரத்துத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலம் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, அதை செப். 30-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.

மேலும், அதன் விவரத்தை குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் மற்றும் வாகன உரிமையாளா்கள் பெரம்பலூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.

குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் தங்கள் குவாரி, கிரஷா்களில் எடைமேடை அமைத்து, அதன் விவரத்தை மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜிபிஎஸ் கருவி பொருத்திய வாகனங்களுக்கு மட்டுமே கனிமங்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.