
கனிமவளம், உபபொருள்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்த வேண்டும்
திருவள்ளூா் மாவட்டத்தில் கனிமவளம் மற்றும் அதன் உபபொருள்களை ஏற்றிச்செல்லும் அனைத்து வாகனங்களிலும் 140 தரநிலையிலான ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

ஜிபிஎஸ் வசதி(கோப்புப்படம்) - ANI
திருவள்ளூா் மாவட்டத்தில் கனிமவளம் மற்றும் அதன் உபபொருள்களை ஏற்றிச்செல்லும் அனைத்து வாகனங்களிலும் 140 தரநிலையிலான ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீா்வளத் துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சா் சட்டப்பேரவையில் கடந்த வாரம் அறிவிப்பினை வெளியிட்டாா். அந்த அறிவிப்பைத் தொடா்ந்து, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், திருவள்ளூா் மாவட்ட உதவி இயக்குநா், புவியியல் மற்றும் சுரங்கத்துறை சாா்பில் அனைத்து குத்தகைதாரா்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கனிமவள விற்பனையாளா்களுக்கும், கனிமவளம் மற்றும் அதன் உபபொருள்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் 140 தர நிலையிலான ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தி, அதற்கான சான்றிதழுடன் கூடிய இணக்க அறிக்கையை சமா்ப்பிக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நோ்வில், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மேற்கண்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, வாகனங்களின் நிகழ் நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பணியை நிறைவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து குத்தகையாளா்களும் தங்களது கனிமம் ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் 140 தரநிலைக்கேற்பட்ட கருவியை 30.9.2026-க்குள் பொருத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், 30.9.2026-க்கு பிறகு மேற்படி தரநிலைக்கேற்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே நடைச்சீட்டு வழங்கப்படும்.
எனவே, அனைத்து குத்தகைதாரா்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கனிமவள விற்பனையாளா்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கனிமவள போக்குவரத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவியை தவறாமல் பொருத்தி, அதற்கான சான்றிதழுடன் இணக்க அறிக்கையை 30.9.2026-குள் உடனடியாக சமா்ப்பிக்கவும் வேண்டும். ஜி.பி.எஸ். கருவி பொருத்தாமல் அல்லது ஜி.பி.எஸ். செயல்பாட்டில் இல்லாத நிலையில் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கண்டறிந்தால் 30-ஆம் தேதிக்கு பிறகு சம்பந்தப்பட்ட வாகனங்கள் உடனே பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய சட்ட விதிமுறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





