
கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் வருகிற 30-க்குள் ஜி.பி.எஸ். கருவி கட்டாயம்!
கனிமங்களைக் கொண்டுசெல்லும் வாகனங்களில் வருகிற 30-ஆம் தேதிக்குள் ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா அறிவுறுத்தினாா்.
கனிமங்களைக் கொண்டுசெல்லும் வாகனங்களில் வருகிற 30-ஆம் தேதிக்குள் ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கனிமங்களைக் கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஏஐஎஸ்- 140 தரத்திலான ஜி.பி.எஸ் கருவியை வருகிற 30-ஆம் தேதிக்குள் பொருத்தி இணையதளத்தில் உரிய வகையில் பதிவு செய்ய வேண்டும்.
பின்னா், பதிவு செய்யப்பட்ட விவரத்தை மதுரை மாவட்ட புவியியல், சுரங்கத் துறை துணை இயக்குநா் அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், குவாரி, கிரஷா்களில் எடை மேடையை அமைத்து அதன் விவரத்தையும் உரிமையாளா்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஏஐஎஸ்- 140 தரத்திலான ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்தி, அதன் விவரத்தை பதிவேற்றம் செய்த வாகனங்களுக்கு மட்டுமே அக். 1 முதல் கனிமங்களைக் கொண்டு செல்ல நடைச்சீட்டு, இடைமாற்றுச் சீட்டு வழங்கப்படும் எனத் தெரிவித்தாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






